ஞானசேகரனிடம் திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது
சென்னை:பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனிடம், திருட்டு நகைகளை வாங்கிய ஆலந்துார் நகை வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், பள்ளிக்கரணை பகுதியில் ஏழு இடங்களில் நகைகள் திருடிய வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. ஞானசேகரனை மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்தனர்.
அப்போது, ஏழு வீடுகளில், 200 சவரன் நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.
திருடிய நகைகளை, ஆலந்துார் நகை வியாபாரி குணால் என்பவரிடம் விற்று பணம் பெற்றதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று, குணாலை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அவரிடம் இருந்து, 120 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
-
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்
Advertisement
Advertisement