திருமழிசை சாலையோரம் வீணாகும் மின்கம்பங்கள்

திருமழிசை:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இங்குள்ள பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே, 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒராண்டாக்கும் மேலாக இந்த மின்கம்பங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வெயிலிலும், மழையிலும் வீணாகி வருகிறது.

இந்த மின்கம்பங்கள் குறித்து திருமழிசை மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையோரம் வீணாகும் மின்கம்பம் குறித்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement