ரூ.38 லட்சம் மோசடி செய்தவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கோழிக்கறி விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி ரூ.38 லட்சத்தை மோசடி செய்த திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஜெயக்குமார் 52. சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் செயல்படும் தனியார் கோழிக்கறி விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இதே நிறுவனத்தில் திருப்பூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் 26, ஏரியா மேலாளராக பணியாற்றினார். 2024ல் பிரசாந்த் பல்வேறு மாவட்டங்களுக்கு கோழிக்கறிகளை சப்ளை செய்தார்.


அதற்குரிய ரூ. 38 லட்சத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் தனது வங்கி கணக்கில் வாங்கி கையாடல் செய்தார். திண்டுக்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பதுங்கி இருந்த பிரசாந்தை கைது செய்தனர்.

Advertisement