குறைதீர் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்க கோரிக்கை


குறைதீர் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்க கோரிக்கை


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பாரபட்சமின்றி அனைவரும் பேச வாய்ப்பளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக விவசாயிகள் சங்க மத்துார் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்களிடம் தெரிவித்து, அதற்கான தீர்வு கேட்டறிந்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கூட்டத்தில் விவசாயிகள் பேச பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பாக, புதிதாக கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு, பேச வாய்ப்புகள் வழங்குவதில்லை. பழைய மூத்த விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து பேச வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே, அனைவருக்கும், பாரபட்சமின்றி தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement