1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு
1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டி, கடல் மட்டத்தில் இருந்து, 1,100 மீட்டர் உயர மலையில், சிவா நஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. மலை மீது ஏற சிறிது துாரம் மட்டுமே படிக்கட்டுகள் உள்ளன. அதன் பின் செங்குத்தாக உள்ள பாறையின் மீது, இரும்பு குழாய்களை பிடித்து தான் பக்தர்கள் ஏற வேண்டும். நேற்று மஹா சிவராத்திரியையொட்டி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி சுற்றுப்புற கிராமத்தினர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கொளுத்தும் வெயிலிலும், காலில் செருப்பு அணியாமல் மலை மீதேறி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
அதேபோல், ஓசூர் மலைமீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியையொட்டி, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், சப்கலெக்டர் பிரியங்கா, எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். 3 மாநிலத்தில் இருந்து வந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. ஓசூர் ராம்நகரிலுள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில், மஹா
சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு