மயான காளியம்மன் கோவில்திருவிழா: தீர்த்தக்குட ஊர்வல


மயான காளியம்மன் கோவில்திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்


குமாரபாளையம்:குமாரபாளையம் மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மயான காளியம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மதியம், ௩:௦௦ மணிக்கு மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், மயான கொள்ளை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு வைபவம், நாளை, எருமைக்கிடா வெட்டுதல், மார்ச், 1 மாலை, 6:00 மணிக்கு மகா குண்டம், பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Advertisement