ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி

புதுடில்லி :
''தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நிலைப்பாடு என்ன,'' என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய தகவல் - ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
'பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் ஹிந்தியை தவிர மைதிலி, ப்ரஜ்பாஷா, பண்டேலி, அவாதி உட்பட பல்வேறு வட இந்திய மொழிகள் பேசப்பட்டு வந்தன. மேலாதிக்க மொழியான ஹிந்தி திணிக்கப்பட்ட பின் அந்த மொழிகள் காணாமல் போயின' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என்ன நினைக்கிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
ஹிந்தி பேசும் மக்கள் வாழும் தொகுதியின் எம்.பி.,யான அவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு ஆழமற்றது. தி.மு.க., அரசின் மோசமான நிர்வாகத்தை மறைப்பதற்காக இந்த பிளவுபடுத்தும் சூழ்ச்சியை அவர் கையில் எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் சிக்கியது; கடத்தல் குருவியா என விசாரணை
-
விண்வெளிக்கு செல்கிறார் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி!
-
மக்களே தெரிஞ்சுக்கோங்க... மார்ச்சில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
-
ராணுவ விஞ்ஞானி டில்லி பாபுவுடன் ஒரு நேர்காணல்
-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்
-
முதல்வர் நிதீஷ் இதை செய்தால், அரசியலைக் கைவிடுகிறேன்: பிரசாந்த் கிஷோர் சவால்