மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

சென்னை: திருவள்ளூர், சேலம், துாத்துக்குடி மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, அனல் மின் நிலையங்கள் உள்ளன.

அவற்றில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று மாவட்டங்களில் உள்ள மின் நிலையங்களின் வாசலில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில், 'மின் வாரியத்தில் காலி பணியிடங்கள் அதிகம் உள்ளதால், மின் வினியோகம், மின் நிலையங்களில், ஒப்பந்த ஊழியர்கள் தான் அதிக பணிகளை செய்கின்றனர்.

'குறிப்பாக, இயற்கை பேரிடர் சமயங்களில் உயிரை கொடுத்து பணிபுரிகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement