மலர் கண்காட்சி செடிகள் பாதி விலைக்கு விற்பனை

புதுச்சேரி : வேளாண் மற்றும் மலர், கனி கண்காட்சியில் இடம்பெற்ற செடிகள் பாதி விலையில் விற்கப்படுகிறது.

புதுச்சேரி தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை இணை இயக்குனர் செய்திகுறிப்பு:

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம், கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை, வேளாண் விழா-2025 மற்றும் 35வது, மலர், காய், கனி கண்காட்சி, புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடந்தது.

இக்கண்காட்சியில், ஏராளமான மலர் செடிகள், பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டன. காட்சிப்படுத்தப்பட்ட மலர்ச்செடிகளை, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் வைத்து பராமரிக்கும் வகையில், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று (1ம் தேதி) வரை அலுவலக நேரத்தில், பொதுமக்கள், தோட்டக்கலை ஆர்வலர்கள், மலர்ச்செடி பிரியர்கள், தாவரவியல் பூங்கா அலுவலர்களை தொடர்பு கொண்டு, செடிகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement