நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 55பேர் காயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டி வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் ஏராளமான ,காளைகள் வீரர்கள் பங்கேற்ற நிலையில் காளைகள் முட்டியதில் 55பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டயில் வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.

ஆர்.டி.ஓ.,சக்திவேல் துவக்கி வைத்த இதில் 785 காளைகள்,294 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், மதுரை, தேனி போன்ற பகுதி மாடுகள் பங்கேற்றன. வீரர்கள், பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 55பேர் காயம் அடைத்தனர்.

Advertisement