ஆலோசனை கூட்டம்

மதுரை : மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் மதுரை மாநகராட்சி ஆசிரியர் நலச்சங்க கூட்டம் தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகி ரோஸ்லின் விக்டோரியா வரவேற்றார்.


நிர்வாகிகள் நாகஜோதி, முனியாண்டி, முருகன், ரெங்கராஜன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் மார்ச் 8 ல் மாநகராட்சி திரு.வி.க.,மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் தியாகராஜன் தலைமையில் மகளிர் தினவிழாவை கொண்டாடுவது என தீர்மானித்தனர்.

Advertisement