கும்பமேளாவில் பணியாற்றிய துாய்மைப்பணியாளர்கள் கவுரவிப்பு!

பிரயாக்ராஜ்: கும்பமேளா நடந்த திரிவேணி சங்கமத்தில் துாய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களை, உ.பி., மாநில அரசு சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுரவித்தார்.



உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா நிகழ்வு பிப்.26ம் தேதி நிறைவு பெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த கோடிக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் நீராடி மகிழ்ந்தனர்.


கும்பமேளா நிறைவு பெற்றுவிட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுரவித்தார். கும்பமேளா மைதானத்தை தூய்மை செய்யவும் உத்தரவிட்டார்.


இந் நிலையில் சிறப்பு அதிகாரி அகான்ஷா ராணா தலைமையிலான குழுவினர் தூய்மை பணியில் இறங்கி உள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், முகாம்கள் என அனைத்தையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.


மொத்தம் 15 நாட்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வார்கள் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மகா கும்ப மேளாவுக்கு பின்னரும் அங்கு வரும் பக்தர்களுக்கு உரிய, போதுமான சுகாதாரமான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement