சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் 2 பேர் சுட்டுக்கொலை; ஓராண்டில் 83 பேர் என்கவுன்டர்

சுக்மா: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அட்டகாசம் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் செல்வதற்கே அச்சப்படும் நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாவோயிஸ்ட் படையினரின் முகாம்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் மாவோயிஸ்ட்கள் 83 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று கோப்ரா படையினருடன் சேர்ந்து பாதுகாப்பு படையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும்
-
கடலுாரில் பா.ஜ., கட்சியினர் மறியல்!
-
பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்
-
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் பயணி கைது
-
கோவை அருகே ரூ.1 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: வாகன சோதனையில் போலீசார் அதிரடி
-
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்: உதவி கிடைக்கவில்லை என வேதனை
-
சமூகத்தில் நிலவும் வன்முறைக்கு சினிமா காரணமா: சுரேஷ் கோபி சொல்வது இதுதான்!