அமெரிக்கா உடனான உறவை சரி செய்ய முடியும்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை

5


வாஷிங்டன்: அமெரிக்க உடனான உறவை சரி செய்ய முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


உக்ரைன் - ரஷ்யா இடையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய அவர், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


இதனைத் தொடர்ந்து, டிரம்ப் ஆதரவு மீடியாவிற்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்கா மற்றும் டிரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இரு நாட்டு உறவு என்பது, இரண்டு அதிபர்களுக்கும் மேலானது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி என்பது பெரிய அளவிலும், ராணுவ ரீதியிலும் தேவைப்படுகிறது. அமெரிக்கா ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement