நடிகை பின்புலத்தில் ஆளுங்கட்சி; கயல்விழி சீமான் பேட்டி

சென்னை: நடிகை பின்புலத்தில் ஆளுங்கட்சி இருப்பதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வரும்போது கையெழுத்திட்டு, சம்மனை வாங்கிக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். சம்மனை கொண்டு வந்தவர்கள் எதுவுமே சொல்லாமல், வெளியே ஒட்டிவிட்டு சென்றனர். இரவு உடை அணிந்திருந்ததால், வெளியே சென்று படிப்பதற்கு சங்கடமாக இருந்தது. அதனால், சம்மனை கிழித்து வரச் சொல்லி பணித்திருந்தேன். ஆனால், போலீசார் திட்டமிட்டு, எங்கள் பாதுகாவலரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யும் அளவுக்கு, அவர் குற்றம் செய்யவில்லை.திருமணம் ஆனது முதல், 'சீமான் கைதாகி விடுவார், கைதாகி விடுவார்' என்று தான் சொல்கின்றனர். உளவியல் ரீதியாக எங்களை தொந்தரவு செய்யவே, இதெல்லாம் நடக்கிறது.போலீசாரின் சம்மனுக்கு மதிப்பளித்து சீமான் நிச்சயம் ஆஜராவார் என்பது போலீசுக்கும் தெரியும். 35 லட்சம் ஓட்டுகள் பெற்ற தலைவர் மீது, பல வழக்குகள் இருந்தாலும், பாலியல் குற்றம், பாலியல் குற்றம் என சொல்லி அவமதிக்க நினைக்கின்றனர். நிறைய சம்மன் வருகிறது.
அதனால் தான், இன்று 'நோட்டீஸ் போர்டு' வைத்துள்ளோம். சம்மன் ஒட்டப்பட்டு விட்டால், உள்ளே எடுத்து சென்று படித்துவிட்டு, மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட திட்டம்.எங்கள் வீட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும், அருகில் உள்ள பூங்காவில் வைத்து அடித்துள்ளனர். பின், காவல் நிலையம் அழைத்து சென்று, அங்கு இரும்பு கம்பியில் துணியை சுற்றி அடித்துள்ளனர். நடிகையின் பின்புலத்தில் இருந்து, ஆளுங்கட்சி தான் இயக்குகிறது என எல்லாருக்கும் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





மேலும்
-
அமெரிக்கா உடனான உறவை சரி செய்ய முடியும்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை
-
தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்; அண்ணாமலை தாக்கு
-
பொய்வழக்கு போடுவதில் அரசு முனைப்பு; சீமான் குறித்த கேள்விக்கு அன்புமணி பதில்!
-
போலீசாரின் செயல் ரொம்ப மோசம்; மார்க்சிஸ்ட் கண்டனம்
-
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் 2 பேர் சுட்டுக்கொலை; ஓராண்டில் 83 பேர் என்கவுன்டர்
-
ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் கோர விபத்து; டிரக், பஸ் மோதலில் 4 பேர் பலி