ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் கோர விபத்து; டிரக், பஸ் மோதலில் 4 பேர் பலி

லக்னோ; ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் டிரக், பஸ் மோதிக் கொண்ட கோர விபத்தில் 4 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
லக்னோவில் இருந்து ஆக்ரோ நோக்கி பஸ் ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஆக்ரோ - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் பதேஹாபாத் என்ற பகுதியில் வந்தது.
அப்போது முன்னே சென்று கொண்டிருந்த டிரக் லாரியை முந்த முயன்றது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்பாராத விதமாக டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் இடதுபுறம் ஒட்டுமொத்தமாக கடும் சேதம் அடைந்தது. விபத்தில் பஸ்சில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 19 பேர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய அவர்கள், காயம் அடைந்தவர்கனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
கடலுாரில் பா.ஜ., கட்சியினர் மறியல்!
-
பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்
-
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் பயணி கைது
-
கோவை அருகே ரூ.1 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: வாகன சோதனையில் போலீசார் அதிரடி
-
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் 'எக்ஸ்' பக்கம் முடக்கம்: உதவி கிடைக்கவில்லை என வேதனை
-
சமூகத்தில் நிலவும் வன்முறைக்கு சினிமா காரணமா: சுரேஷ் கோபி சொல்வது இதுதான்!