அரியலூரில் ரூ.77 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை

3


அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்த, பெரம்பலூரைச் சேர்ந்த வினோத் என்ற பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கையில் ஒரு பேக் எடுத்து வந்த நபரை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். பையில் 500 ரூபாய் பணம் கட்டு கட்டாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக திருச்சி வருமான வரித்துறை அதிகாரியிடம் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்



ரயில்வே போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினேத்குமார் என்பது தெரியவந்தது. பின்னர், வருமான வரித்துறை துணை இயக்குநர் ஸ்வேதா மற்றும் ரயில்வே உதவி ஆய்வாளர் மணிமேல் வைத்தியநாதன் ஆகியோர் வினோத் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.


அவர் எடுத்து வந்தது ஹவாலா பணமா அல்லது அரசியல்வாதிகள் அல்லது தொழிலதிபர்களின் பணமா என விசாரணை நடக்கிறது.

Advertisement