ஸ்டாலின் பிறந்த நாள் விழா 1,000 பேருக்கு பிரியாணி விருந்து

வாலாஜாபாத்,
வாலாஜாபாத் ஒன்றிய தி.மு.க., மற்றும் வாலாஜாபாத் பேரூர் சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழா, வாலாஜாபாதில் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சுந்தர், காஞ்சிபுரம் திமு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்று பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில், வாலாஜாபாத் ஒன்றிய செயலர் சேகர், பேரூராட்சி செயலர் பாண்டியன் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சுகுமாரன், சஞ்சீவ் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement