இரும்பு உருளை ஏற்றிய லாரி குன்றத்துாரில் கவிழ்ந்து விபத்து

குன்றத்துார், 2--

ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தாயரிக்கும் தொழிற்சாலையில் இருந்து, 4,000 கிலோ எடையுள்ள இரும்பு உருளைகளை ஏற்றிக் கொண்டு, அம்பத்துார் தொழிற்பேட்டை நோக்கி, லாரி ஒன்று நேற்று காலை சென்றது.

லாரியை, முகமது அஜிஸ், 40, என்பவர் ஓட்டிச் சென்றார். ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் செல்லும் நெடுஞ்சாலையில்,சிறுகளத்துார் பகுதியில் உள்ள சாலை வளைவில் லாரி வேகமாக சென்றபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக, அங்கு யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியில் இருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement