கோவில் நிரந்தர பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற கோரிக்கை
திருக்கோவில் நிரந்தர பணியாளர்களை, அரசு ஊழியர்களாக மாற்ற, அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் சங்க மாநில தலைவர் குமார், காப்பாளர் கண்ணன், பொதுச்செயலர் ரமேஷ், பொருளாளர் சேட்டு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் சமீபத்தில் அளித்த மனு:
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 10,000க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளனர்.
முதற்கட்டமாக, நிரந்தர பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக மாற்றி அவர்களுக்கு வழங்கப்படும் இதர படி மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும், தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்களை, பணி வரன்முறை செய்ய வேண்டும்.
கோவிலில் தற்காலிக, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவதை போன்று மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
செயல் அலுவலர் நிலை - 4 காலி பணியிடங்களில், 25 சதவீதம் திருக்கோவில் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்தல் உட்பட, 16 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
- - நமது நிருபர் -
மேலும்
-
மயங்கி விழுந்த பள்ளி சிறுவன் சிறுநீர் பரிசோதனையில் அதிர்ச்சி: சாக்லேட்டில் கலந்திருந்த மருந்து குறித்து திடுக்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்