பவித்சிங் கோப்பை 'டி - 20' குருநானக் கல்லுாரி வெற்றி
சென்னை, குருநானக் கல்லுாரி சார்பில், 11வது பவித் சிங் நாயர் மெமோரியல் டி - 20 கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடக்கிறது.
போட்டியில், ஆண்களில் 16 அணிகள் 'லீக்' முறையிலும், பெண்களில் 10 அணிகள் 'நாக் அவுட்' முறையிலும் மோதி வருகின்றன.
நேற்று காலை, குருநானக் கல்லுாரியில் நடந்த ஆண்கள் போட்டியில், குருநானக் மற்றும் கே.எஸ்.ஆர்., அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கே.எஸ்.ஆர்., அணி, 12.5 ஓவர்களில், 65 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து பேட்டிங் செய்த குருநானக் கல்லுாரி, 5 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு, 68 ரன்களை அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், சென்னை வி.ஐ.டி., 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 128 ரன்களை அடித்தது.
அடுத்து இறங்கிய கோவை கே.பி.ஆர்., அணி, 17.5 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 132 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நடந்த போட்டியில், பிள்ளை கல்லுாரி, 99 ரன்கள் வித்தியாசத்தில், ஸ்ரீமணக்குள விநாயகர் கல்லுாரியை தோற்கடித்தது. சேலம் ஸ்ரீஅம்மன் கல்லுாரி, நான்கு ரன்கள் வித்தியாசத்தில், ஹைதராபாத் டி.கே.ஆர்., கல்லுாரியை வீழ்த்தியது.
ஏ.எம்.ஜெயின் கல்லுாரி, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கோபி கலை கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்