குகேஷ் 'நம்பர்-3' * செஸ் தரவரிசையில்...

புதுடில்லி: செஸ் தரவரிசையில் இந்தியாவின் குகேஷ், 'நம்பர்-3' இடம் பிடித்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் தரவரிசை பட்டியல் வெளியானது. நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (2833 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா (2802), ஒரு இடம் முந்தி, 2வது இடம் பிடித்தார்.
நடப்பு உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ் (2787), கூடுதலாக 10 புள்ளி பெற்று, இரண்டு இடம் முன்னேறி, 'நம்பர்-3' ஆக உள்ளார். செஸ் தரவரிசையில் குகேஷின் சிறந்த இடம் இது.
பேபியானோ காருணா (அமெரிக்கா, 2783) 4வது இடத்துக்கு சென்றார். சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (2777), 24 புள்ளிகளை இழந்து, 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
நெதர்லாந்து மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் ஆன பிரக்ஞானந்தா (2758), 17 புள்ளி அதிகம் பெற்றார். தரவரிசையில் 6 இடம் முன்னேறிய இவர், 8வது இடம் பிடித்துள்ளார்.
மற்ற இந்திய வீரர்கள் ஆனந்த் (14, 2743), அரவிந்த் சிதம்பரம் (22, 2732), விதித் குஜ்ராத்தி (24, 2720), 'டாப்-25' பட்டியலில் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி (2528, 6வது), தொடர்ந்து 'டாப்-10' பட்டியலில் உள்ளார். வைஷாலி (2484, 14), ஹரிகா (2483, 16) அடுத்து உள்ளனர்.
மேலும்
-
மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி
-
அணையில் மூழ்கிய பெயின்டர்
-
மாவட்டத்தில் 22,424 மாணவர் பங்கேற்கும்பிளஸ் 2 தேர்வு 108 மையங்களில் தொடக்கம்
-
சரியான நேரத்துக்கு இயக்கப்படாத அரசு பஸ்போக்குவரத்து மேலாளருக்கு மக்கள் கடிதம்
-
குடிபோதையால் கணவனை பிரிந்த காதல் மனைவிகுழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு குமுறல்
-
மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'