கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி
பொன்னேரி, பழவேற்காடு, ஜமீலாபாத் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் காசிம், 33, நிஜாமுதின், 32, அரோன், 32. மூவரும் சமையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று, தேவம்பட்டு பகுதியில் பணி முடிந்து மாலை 5:00 மணிக்கு, மூவரும் 'ராயல் என்பீல்டு' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தேவம்பட்டு - மெதுார் சாலை வழியாக கோளூர் கிராமம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்திற்குள்ளானது. இதில், பைக் ஓட்டி வந்த அப்துல் காசிம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பாலைவனம் போலீசார், காயமடைந்த நிஜாமுதின், அரோன் ஆகியோரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement