காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
டெல் அவிவ், போர் நிறுத்தத்தை நீட்டிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை எச்சரித்துள்ள இஸ்ரேல், காசா பகுதிக்கு சர்வதேச நாடுகளின் உதவிப் பொருட்கள் அனுப்புவதை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.
ஒப்பந்தம்
இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பல்வேறு நாடுகளின் முயற்சியால் கடந்த ஜன., 19 முதல், நேற்று முன்தினம் வரை, முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில், இருதரப்பில் இருந்தும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சு தொடர்பான ஆலோசனையில் எகிப்து உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை அல்லது ஏப்., 20 வரை போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் துாதர் ஸ்டீவ் விட்காப்பின் யோசனைக்கு, இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.
மிரட்டல்
இதுகுறித்து இஸ்ரேல் நாட்டு மூத்த அதிகாரி கூறுகையில், 'மத விழா நாட்களில் பதற்றங்களைத் தணிப்பதே போர் நிறுத்தத்தின் நோக்கம். ரம்ஜான் நோன்பு துவங்கும்போது உலகெங்கிலும் உள்ள பலர், பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். இதனால் போர் நிறுத்தத்தை ஏப்., 20 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
'இதுகுறித்து ஹமாஸ் தரப்பில் எந்த பதிலும் வராததை அடுத்து, காசாவிற்கு உதவிப் பொருட்கள் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து அமெரிக்காவின் யோசனையை ஹமாஸ் ஏற்காவிட்டால், மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பதிலளித்துள்ள ஹமாஸ் அமைப்பு, 'உதவிகளை நிறுத்தியதன் வாயிலாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. மிரட்டல் வாயிலாக மலிவான செயலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீது அப்பட்டமான தாக்குதலை நடத்தியுள்ளது' என, தெரிவித்துள்ளது.
மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்