ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அறிவித்தார், அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்காவில், 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அதே நேரத்தில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். அரசின் 2019 புள்ளி விபரங்களின்படி, 6.80 கோடி பேர் வீடுகளில், ஆங்கிலம் அல்லாத மொழிகளை பேசுகின்றனர். இதில், நான்கு கோடி பேர் ஸ்பானிஷ் மொழியை பேசுபவர்கள்.
ஏற்கனவே, அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்கள், ஆங்கிலத்தை அலுவல் மொழியாக அறிவித்து, பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுதும் ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கும் என, டிரம்ப் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
கடந்த 1990களில், அப்போது அதிபராக இருந்த பில் கிளிண்டன், அரசின் உதவிகளை பெறும் மத்திய அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தற்போது, அந்த உதவியை வழங்குவதற்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை, அந்தந்த மத்திய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களே முடிவுசெய்து கொள்ளலாம்.

மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்