பிச்சைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
சென்னை, வேப்பேரி, டவுட்டன் மேம்பாலம் அருகே, நடைபாதையில் வசித்து வருபவர் சிவா, 30. நேற்று முன்தினம் காலை, புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கத்தி முனையில் அவரிடமிருந்து, 500 ரூபாயை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பேரி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், புரசைவாக்கம் சாலைமா நகரைச் சேர்ந்த நிர்மல்ராஜ், 23, என்பவர் பணம் பறித்தது தெரிந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர். நிர்மல்ராஜ், வேப்பேரி காவல் நிலைய பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது, கொள்ளை, அடிதடி உட்பட, 10 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
Advertisement
Advertisement