எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான போட்டி ஹிந்துஸ்தான், எஸ்.ஆர்.எம்., 'சாம்பியன்'

சென்னை, எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் அணியும், பேட்மின்டன் போட்டி இருபாலரிலும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் முதலிடங்களை கைப்பற்றின.

எஸ்.எஸ்.என்., கல்லுாரி சார்பில், எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னை காலவாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்தன.

இதில், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம் :

கூடைப்பந்து போட்டி

பிரிவு அணிகள் புள்ளிகள்

ஆண்கள் இந்துஸ்தான் - ஜெ.ஐ.டி., 70 - 75

பெண்கள் எம்.ஓ.பி., வைஷ்ணவா - ஜெ.ஐ.டி., 77 - 65

பேட்மின்டன் பேட்டி

பெண்கள் எஸ்.ஆர்.எம்., பல்கலை - எம்.ஓ.பி., வைஷ்ணவா 2 - 1

ஆண்கள் எஸ்.ஆர்.எம்., பல்கலை - எஸ்.எஸ்.என்., கல்லுாரி 2 - 0

கால்பந்து போட்டி

ஆண்கள் ஹிந்துஸ்தான் - செயின்ட் ஜோசப் 5 - 4

ஸ்குவாஷ் போட்டி

ஆண்கள் ஆன்ட்ரூ(லயோலா) - ஜெபின்(சாய் ராம்) 2 - 0

சதுரங்கம் போட்டி

பெண்கள் எஸ்.எஸ்.என்., - செயின்ட் ஜோசப் 14 - 13

ஆண்கள் சிவ் நாடார் - ஆர்.ஐ.டி., 13 - 11

டேபிள் டென்னிஸ் போட்டி

ஆண்கள் லயோலா - எஸ்.எஸ்.என்., கல்லுாரி 3 - 1

பெண்கள் எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., வைஷ்ணவா 3 - 1

டென்னிஸ் போட்டி

ஆண்கள் எஸ்.ஆர்.எம்., பல்கலை - எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை 2 - 1

பெண்கள் எம்.ஓ.பி., வைஷ்ணவா - திருச்சி ஸ்ரீமதி இந்திரா 2 - 0

Advertisement