ரம்ஜான் சிந்தனைகள்-1

2

நோன்பின் நோக்கம்

பிறந்து விட்டது ரம்ஜான் மாதம். இந்த ரம்ஜான் நோன்பின் நோக்கம் மற்றவர்களின் பசிக்கொடுமையை உணர்வதும், அவர்களுக்கு தானம் செய்வதும் தான். இது போன்ற நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்வோம்.
* பெற்றோருக்கு மரியாதை கொடுங்கள்.
* குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியை போதியுங்கள்.
* உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்.
* பிறருடைய துன்பத்தில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.
* ஆறுதல் தேவைப்படுவோருக்கு நல்ல வார்த்தைகளை கூறுங்கள்.
* விருந்தினரை அன்புடன் உபசரியுங்கள்.
* இறைவன் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே மனம், உடல், வீடு, பொது இடம் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.
இத்தகைய நல்ல நினைவுடன் நோன்பை துவங்குவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி

Advertisement