திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்- கரூர் ரோடு என்.எஸ்., நகர் லட்சுமி நகரில் ஸ்ரீராம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கருடாழ்வார், விநாயகர் சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் இன்று (மார்ச் 03) காலை சுவாமி சிலைகள் சேதமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
இது குறித்து, பக்தர்கள் தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
'சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.









