'ஐ-லீக்' கால்பந்து: பெங்களூரு ஏமாற்றம்

பெங்களூரு: 'ஐ-லீக்' கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய பெங்களூரு அணி 1-2 என, அய்சால் அணியிடம் தோல்வியடைந்தது.

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் 'ஐ-லீக்' தொடர் நடத்தப்படுகிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, அய்சால் (மிசோராம்) அணிகள் மோதின. ஹென்றி கிசெக்கா (28வது நிமிடம்) கைகொடுக்க முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அய்சால் அணிக்கு லாலம்புயா சைலோ (70வது நிமிடம்), லாலியன்ஜுவாலா லால்பியாக்னியா (75வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.


பெங்களூரு அணி 17 போட்டியில், 4 வெற்றி, 5 'டிரா', 8 தோல்வி என, 17 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. அய்சால் அணி 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 'டிரா', 9 தோல்வி) 11வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement