ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 0-3 என வடகிழக்கு யுனைடெட் அணியிடம் வீழ்ந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. வடகிழக்கு யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் (7வது நிமிடம்), ஜித்தின் சுப்ரான் (26வது), அஜாரை (38வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
இதுவரை விளையாடிய 23 போட்டியில், 6 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 24 புள்ளிகளுடன் சென்னை அணி 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வடகிழக்கு யுனைடெட் அணி 35 புள்ளிகளுடன் (9 வெற்றி, 8 'டிரா', 6 தோல்வி) 5வது இடத்துக்கு முன்னேறி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement