விற்பனைக்கு அரசு நிலம் போஸ்டரால் சலசலப்பு

உத்திரமேரூர், உத்திரமேரூரில் உள்ள தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, எண்டத்துார் சாலை ஆகிய இடங்களில், அரசு நிலம் வீட்டுமனை பிரிவுகளாக மாற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யும் முயற்சி நடப்பதாக கூறி போஸ்டர் ஓட்டப்பட்டு உள்ளது.

அதில், மாவட்ட நிர்வாகமே, தமிழ்நாடு அரசே, அரசு நிலம் விற்பனை நடவடிக்கை எடுக்குமா, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, நீரடி மதுரா, குப்பைநல்லுார் பகுதியில் பேரூராட்சி அரசு நத்தம் புறம்போக்கு 504/2 சர்வே எண் கொண்ட, 51 சென்ட் நிலம் வீட்டுமனை பிரிவுகளாக மாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது.

மாவட்ட நிர்வாகம் ஆணையிட்டும், உத்திரமேரூர் தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சி நிலத்தை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.

இந்த நிலம் உத்திரமேரூர் சார் - பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தும், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் கண்டுகொள்ளவில்லை என்றும், அரசு நிலத்தின் வரைபடம், கலெக்டர் கடிதம், கணினி பதிவு, அடங்கல் ஆகியவற்றின் படமும் இணைக்கப்பட்டு, இவன் புரட்சியாளர் அம்பேத்கர் ஆய்வு மய்யம் என்று குறிப்பிடப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement