காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

ஊட்டி:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே உள்ள, ஆணிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இன்று மாலை, வனப்பகுதி வழியாக நடந்து வந்த, மசினகுடி சொக்கநல்லி பகுதியைச் சேர்ந்த ராமன், 60 என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

வனத்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement