விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு
பண்ருட்டி : பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பிரச்னையில் விஷம் குடித்த தம்பதியில் நேற்று முன்தினம் மனைவி இறந்த நிலையில் நேற்று கணவரும் உயிரிழந்தார்.
பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால்,32; விவசாயி; இவரது மனைவி மலர்கொடி,28; திருமணமாகி 8 ஆண்டாகும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி,55; கடந்த 1ம் தேதி வீட்டு மனை பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ஜெயபாலுக்கு குழந்தை இல்லாதது குறித்து சாரங்கபாணி பேசியுள்ளார். அதில் மனமுடைந்த ஜெயபால், மலர்கொடி இருவரும் வீட்டில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தனர். உடன் இருவரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மலர்கொடி இறந்தார்.
மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயபால் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஜி.எச்., ரோட்டில் சிக்னல் இல்லா பயணத்தால் சிக்கல்
-
அஸ்சாமில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தல்; நால்வருக்கு சிறை
-
சுவாமி சிலை உடைப்பு
-
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவம் நாளை கொடியேற்றம்: மார்ச் 14ல் தெப்பம்
-
நாளை கோனியம்மன் தேர்த்திருவிழாவில் மின்தடை
-
மருத்துவமனையில் பணம் முதலீடு பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம்