போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம், ;போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் (கலால்) ராஜி, உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சுகந்தன், மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கலெக்டர் ரஹ்மான் பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில், போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில், போதைப் பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு செய்ய வேண்டும். மேலும், போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம், போதைப் பொருட்கள் தடுப்பு செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
கிரிஷ் சோடங்கருடன் சிதம்பரம், பீட்டர் சந்திப்பு; கார்த்தி உட்பட 4 எம்.பி.,க்கள் புறக்கணிப்பு
-
காட்டு யானைகள் அச்சத்தால் வனத்துறை பாதுகாப்புடன் 10ம் வகுப்பு வினாத்தாள்
-
செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலி; இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை
-
தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி
-
திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு பஸ்சுடன் சிகிச்சைக்கு வந்த டிரைவர்
-
பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய சிறைக்காவலர் '‛சஸ்பெண்ட்'