பெண் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கிய  சிறைக்காவலர்  '‛சஸ்பெண்ட்'

தேனி : தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்ட சிறை காவலர் தங்கப்பாண்டி மீது கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வழக்குப் பதிவான நிலையில் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

கம்பம் மணிராஜா நகர் தங்கபாண்டி. இவர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் சிறை காவலராக பணிபுரிகிறார். அவரது மனைவி மேகலா, மாமியார் கற்பகவள்ளி. இவர்கள் மூவருக்கும் கம்பம் அரசு மருத்துவமனை அருகில் வசிக்கும் அருண் மனைவி ஜனனிக்கும் 33, கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. 2024 டிச.19ல் ஜனனி வீட்டிற்குள் அத்துமீறி மூவரும் நுழைந்து மிரட்டி தாக்கினர்.

ஜனனி புகாரில் கடந்த பிப்.27 ல் தங்கபாண்டி, மேகலா, கற்பகவள்ளி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கம்பம் தெற்கு எஸ்.ஐ., அல்போன்ஸ் ராஜா வழக்குப் பதிவு செய்தனர். கற்பகவள்ளியை கைது செய்தனர். தங்கபாண்டியை 'சஸ்பெண்ட்' செய்து மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement