சேப்பாக்கம் மினி ஸ்டேடியம் இன்று திறப்பு

சென்னை,

சேப்பாக்கம் மினி ஸ்டேடியம் இன்று திறப்பு



தமிழகத்தில், அனைத்து எம்.எல்.ஏ., தொகுதியிலும் மினி ஸ்டேடியம் கட்டப்படும் என, விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியான கொளத்துார், துணை முதல்வர் தொகுதியான சேப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி, காரைக்குடி ஆகிய 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க, தலா, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன.

அந்தவகையில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கட்டப்பட்ட மினி ஸ்டேடியத்தை, துணை முதல்வர் உதயநிதி இன்று திறந்து வைக்கிறார். இதில், 250 பேருக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் வகையிலான ஹாக்கி ஸ்டேடியம், குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் ஓடுதளம், பயிற்சி பெறும் வகையில் இரண்டு பாக்ஸ் கிரிக்கெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Advertisement