விருகையில் பல்வேறு பணிகள்

விருகம்பாக்கம், விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் மின் மயானம் அமைந்துள்ளது.

இந்த மின் மயானம், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், பொலிவிழந்து காணப்படுகிறது. இதையடுத்து, மின் மயானத்தை சீர்செய்ய கோரிக்கை எழுந்தது.

அதன்படி, மின் மயானம் மற்றும் ஜாபர்கான்பேட்டை வடிவேல் தெருவில் உள்ள சமூகநலக்கூடத்தை சீரமைக்க, 2.24 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மின் மயானத்தில் சிமென்ட் சாலை, பசுமை பகுதி, மியாவாக்கி காடு உள்ளிட்டவை அமைய உள்ளன.

Advertisement