டூவீலர் புளிய மரத்தில் மோதி கல்லுாரி மாணவர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் செல்வம் 49. சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியர். இவரது மகன் தமிழ்திராவிடன் 17. பழநியில் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில், நான்கு மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் செல்வத்திற்கு தெரியாமல் டூவீலரை தமிழ்திராவிடன் ஓட்டிச் சென்று, காட்ரோடு பகுதியில் ரோட்டோரம் புளியமரத்தில் மோதி கீழே கிடந்தார். அப்போது செல்வம் தமிழ்திராவிடனை அலைபேசியில் தொடர்பு கொண்டார். வேறொரு நபர் பேசியதில், 'அதில் உங்கள் மகன் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பதாக' தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement