பிளக்ஸ் போர்டுகளால் இடையூறு அச்சக  உரிமையாளர்கள் மீது வழக்கு

தேனி: தேனி போலீஸ் ஏட்டு சரவணன் தலைமையிலான போலீசார் நகராட்சி அருகே ரோந்து சென்றனர்.

அப்போதுமூசா பிளக்ஸ்சில் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர போர்டை அரசு அனுமதி இன்றி பொது இடத்தில்இடையூறாக வைத்தனர். தேனி போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான போலீசார் தேனியூனியன் அலுவலகம் முன் ரோந்து சென்றனர்.

அப்போது விஷூவல் பிளக்ஸ்சில் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர போர்டை அரசின் அனுமதி இன்றிபொது இடத்திற்கு இடையூறாக வைத்திருந்தார். 2 பிளக்ஸ் போர்டு உரிமையாளர்கள் மீது, எஸ்.ஐ.,சரவணன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement