தகராறில் பூண்டு வியாபாரி பலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி தேவர்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் 34. கொடைக்கானலிலிருந்து வெள்ளைப்பூண்டை வாங்கி வடுகபட்டியில் விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் ராஜேஷ்குமார் சின்னமாமியார் விஜயாவிற்கும், அதே பகுதியில் வெள்ளைப்பூண்டு கடை வைத்துள்ள முருகன் என்பவருக்கும் கொடுக்கல், வாங்கலில் வாக்குவாதம் ஏற்பட்டது. விஜயாவிற்கு ஆதரவாக ராஜேஷ்குமார், முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது மயங்கி விழுந்தார். ராஜேஷ்குமார் உறவினர் அழகர்சாமி பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜேஷ்குமாரை சேர்த்தார். சிறிது நேரத்தில் ராஜேஷ்குமார் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement