கள்ளகாதல்கள் விவகாரம்: ஏ.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
மூணாறு: கள்ளக்காதல்கள் விவகாரத்தால், ஏ.எஸ்.ஐ., பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மூணாறு அருகே அடிமாலி போலீஸ் ஸ்டேஷனில் ஏ.எஸ்.ஐ., யாக பணியாற்றியவர் ஷாஜி 48. இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளிக்க வந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
இதனிடையே வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டு நெருங்கி பழகினார்.
அந்த இரண்டு பெண்களும் நேரியமங்கலம் நகரில் எதிர்பாராத விதத்தில் சந்தித்து கொண்டபோது ஏ.எஸ்.ஐ., முன்பாக கள்ளக்காதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக் கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து சிறப்பு பிரிவு போலீசார் இடுக்கி எஸ்.பி. விஷ்ணு பிரதீப்பிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அவர், ஏ.எஸ்.ஐ.,யை இடுக்கி ஆயுத படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், எர்ணாகுளம் மண்டல டி.ஐ.ஜி., யிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆனால் ஆயுத படை பிரிவுக்கு பணிக்கு செல்லாமல் ஏ.எஸ்.ஐ. விடுப்பில் சென்றார்.
அவரை, எஸ்.பி. தாக்கல் செய்த அறிக்கையின்படி பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!