அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
போடி: போடி மேலத் தெரு பால மணிகண்டன் 25. திருப்பூர் பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்கிறார். போடி சர்ச் தெரு விஷ்ணு 23. இருவரும் நண்பர்கள். ஓராண்டுக்கு முன்பு குரங்கணியில் நடந்த நிகழ்ச்சியில் விஷ்ணுவின் ஒரு பவுன் செயின் காணாமல் போனது. செயினை பாலமணிகண்டன் எடுத்து இருக்கலாம் என கேட்டது சம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது.
நேற்று திருப்பூரில் இருந்து போடிக்கு வந்த பால மணிகண்டனிடம் செயினை தருமாறு விஷ்ணு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணு பாலமணிகண்டனை அரிவாளால் கழுத்தில் வெட்டி தப்பி ஓடினார். பால மணிகண்டன் போடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போடி டவுன் போலீசார் விஷ்ணுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
Advertisement
Advertisement