பிளஸ் 2 தேர்வில் 13,020 பேர் பங்கேற்பு தமிழில் 206 பேர் 'ஆப்சென்ட்'

1

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.

மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6271, மாணவிகள் 6792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

54 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு துவங்கும் முன் மாணவர்களுக்கு ஆலோசனைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது.

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவி உட்பட 3 பேர் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வினை எழுதினர்.

கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு மேரிமாதா மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

206பேர் 'ஆப்சென்ட்'பள்ளி மாணவர்கள் 6171, மாணவிகள் 6707 பேர் என 12,878 பேர் பங்கேற்றனர்.

தமிழ் தேர்வில் மாணவர்கள் 100, மாணவிகள் 85 பேர் என மொத்தம்185 பேர்.

இதுதவிர தனித்தேர்வர்கள் 21 பேர் என மொத்தம் 206 பேர் தேர்வு எழுத வில்லை.

Advertisement