காப்புக்காடுகளில் 2 வகை தீத்தடுப்பு கோடுகள் அமைப்பு: வனவிலங்குகள், நுண்ணுயிர் காக்க நடவடிக்கை

தேனி: தேனி வனச்சரகத்தில் 38 கி.மீ., துாரத்தில் 2 வகை தீத்தடுப்பு கோடுகளை அமைத்து, அதில் வளரும் அரிய வகை தாவரங்கள், மரங்களையும் காக்கவும், அங்கு வாழும் விலங்கினங்கள், நுண்ணுயிர்ளையும் காப்பாற்ற வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேனி வனச்சரகத்தில் 9943 எக்டேர் காப்புக் காடுகள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் வால்கரடு, லட்சுமிபுரம் வரட்டாறு, முத்துக்கோம்பை, தம்பிராண்கானல், அணைக்கரைப்பட்டி, பூதிப்புரம், போடி மரக்கான்மலை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையான முறையில் தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அடிக்கடி மனித தவறுகளால் காப்புக் காடுகளில் தீப்பிடிப்பது தொடர்கின்றன. இதனை தடுக்க தேனி வனச்சரகம், கிராமவனக்குழுக்களை அமைத்து தீவிர கண்காணிப்பு செய்கிறது. இங்கு போதை புற்களை விட அடர் பசுமையாக ஈச்சம் செடிகள் வளர்வதால் வணிக பயன்பாட்டிற்கு ஈச்சம் மார்களை அறுக்க செல்வோர், காட்டுத்தீ ஏற்பட காரணமாகின்றனர்.
இருவகை தீத்தடுப்பு கோடுகள்:
ஆண்டுதோறும் ஜனவரியில் துவங்கும் காட்டுத்தீ, ஏப்ரல் இறுதி வரை தொடர்கிறது. சூழல் மண்டலத்தில் பசுமை போர்வை குறைவாதால் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் காப்புக்காடுகளில் தீ ஏற்படுகிறது.
இந்நிலையில் தேனி வனச்சரகம் மூலம் 2 வகையான தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று மீட்டர் அகலத்தில் அணைக்கரைப்பட்டி, அருங்குளம் மேற்கு, கிழக்குப்பகுதி, முத்துக்கோம்பை பகுதியிலும் 33 கீ.மீ., தொலைவிலும், 6 மீட்டர் அகலத்தில் 5 கி.மீ., தொலைவில் வீரப்ப அய்யனார் கோயில் தம்பிராண்கானல், அகமலையின் மேற்குப் பகுதியில் உள்ள வரட்டாறு, போடி உலகுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் 38 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடுகளை அமைக்கப்பட்டு .உள்ளன.
தேனி ரேஞ்சர் சிவராம் கூறியதாவது: காட்டுத்தீ ஏற்படும் முன் காப்புக்காடுகளை காக்க வேண்டும் என்ற முன்னெடுப்புடன் இரு வகை தீத்தடுப்பு கோடுகளை ஏற்படுத்தி தாவரங்கள், அரியவகை மரங்கள், வனவிலங்குகளள் காப்பாற்றும் நடவடிக்கையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தனிமனித தவறுகள் ஏற்படாதவாறு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம்., என்றார்.
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!