தேசிய சிலம்ப போட்டி: மாணவர்கள் முதலிடம்

போடி: தேசிய அளவிலான சிலம்ப போட்டி புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

இதில் போடி ஆதிபோகர் சிலம்ப பயிற்சி கூடம் சார்பில் 41 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிலம்பம், வாள் வீச்சு, சுருள் வால், வேல் கம்பு உள்ளிட்ட போட்டியில் ஆதிபோகர் சிலம்ப பயிற்சி கூட மாணவர்கள் 31 பேர் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். 10 பேர் 2ம் இடம் பெற்றனர்.

இவர்கள் வரும் ஏப். 27ம் தேதி மலேசியாவில் நடக்கும் உலக சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள், மாஸ்டர் காளிதாசை பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement