தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதால் வெளியேறும் குடும்பங்கள் பொட்டிபுரம் இந்திரா காலனியின் அவலம்

தேவாரம்,: தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் குடும்பங்கள் வெளியேறி வருகின்றன.
சின்னமனூர் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு கிழக்கு தெருவில் இந்திரா காலனி அமைந்துள்ளது.
இப்பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.
உரிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் மழை நீர் உள்ளே புகுந்து குடியிருக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
சாக்கடை வசதி இருந்தும் தூர்வராமல் மண் மேவி கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகம் உள்ளது.
குடிநீர் பைப் லைன் திறவு கோல் பழுது அடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யாமல் குடிநீர் வீணாக செல்கிறது. சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.கிராம மக்கள் கருத்து:
அச்சத்தில் வீடுகளை காலி செய்யும் நிலை
பெருமாள்ராஜ், பொட்டி புரம்: இந்திரா காலனியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
தரம் இன்றி கட்டப்பட்டதால் வீட்டின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு, மேல்தளம் கான்கிரீட் கம்பிகள் தெரியும் வகையில் சேதம் அடைந்து உள்ளது.
இதனால் அச்சத்தில் வசிக்கிறோம். வீடுகள் பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை எவ்வித பணிகளும் செய்ய வில்லை.
வேறு வழி இன்றி சிமென்ட் வைத்து நாங்களாகவே பூசி வருகின்றோம்.
இடிந்து விழும் அபாயத்தால் பலர் வீட்டில் குடியிருக்காமல் வெளியேறி விட்டதால் பல வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக தெருவின் நடுவே மின் கம்பம் அமைந்து உள்ளன.
ரூ.5 லட்சம் மதிப்பில் மின் இணைப்புடன் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாடு இன்றி உள்ளது. சேதம் அடைந்த வீடுகளை சீரமைத்திட சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த மின் கம்பங்கள்
சுதா, பொட்டிபுரம்: குடிநீர் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி சுத்திகரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சிமென்ட் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் டூவீலர் கூட செல்ல முடியாமல் சேதம் அடைந்து உள்ளது. மின்கம்பங்கள் துருப்பிடித்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
பெண்களுக்கான சுகாதார வளாக வசதி இன்றி முட்புதர்களை நாடிச் செல்லும் நிலையில் சிரமம் அடைகின்றனர்.
ஆபத்தான நிலையில் உள்ள சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்திட பொட்டிப்புரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு