படுத்துறாங்கய்யா...: ஒரு சென்டில் வீட்டுகட்டியுள்ளோரை அடையாளம் காண்பது சவால்

மதுரை: மதுரை மாவட்டத்தில் இம்மாதம் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பட்டா வழங்க ஏற்பாடு செய்யும்படி நெருக்கடி கொடுப்பதாக வருவாய்த் துறையினர் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் பத்தாண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்ப்பகுதியில் ஒரு சென்ட் வரையிலும், பிற பகுதிகளில் அதற்கு மேலும் வீடுகட்டி பட்டா இல்லாதோருக்கும் பட்டா வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் 5 லட்சம் பட்டா வரை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில்கூட தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பட்டாக்கள் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் மதுரையில் துணை முதல்வர் உதயநிதி 12 ஆயிரம் பட்டா வழங்கினார்.
அதுபோல இம்மாதம் 3வது வாரம் முதல்வர் ஸ்டாலினும் மதுரையில் பட்டா வழங்கும் வகையில் நலத்திட்ட விழா நடக்க உள்ளது.
இதில் 50 ஆயிரம் பட்டா வழங்க ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர்.
நகர்ப்பகுதியில் ஒரு சென்டில் வீட்டுகட்டியுள்ளோரை கணக்கெடுக்கின்றனர். ஒரு சென்ட் என்ற அளவு பட்டாக்களை தேடுவது கடினமானதாக உள்ளது. இதனால் ஒரு சென்டுக்கு மேல் பட்டா வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.
50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க 11 தாலுகாவிலும் தலா 4 ஆயிரம் பட்டாக்களுக்கு மேல் வழங்க வேண்டும்.
இந்த எண்ணிக்கையை அடையாளம் காண்பது சவாலாக உள்ளதாக வருவாயத் துறையினர் புலம்பி வருகின்றனர்.
மேலும்
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
-
எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
-
வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை