கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை


கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், தொப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மானாவாரி பயிர்களின் அறுவடையும் முற்றிலும் முடிவடைந்ததால், கால்நடை வளர்ப்போருக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வெப்பநிலையால் ஏற்பட்டுள்ள வறட்சி, கால்நடைகளுக்கு தேவையான தீவன புற்கள் வளர்ச்சியை பாதித்துள்ளது. வைக்கோல் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து, லாரிகள் மூலம் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்காக கொண்டு வந்து, ஒரு கட்டு, 160 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்.
வறட்சி, கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பால் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யப்படும் பால் பணத்தை விட, தீவன செலவுகள் அதிகரித்துள்ளது. இதில், கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

Advertisement