பணி நியமன ஆணை வழங்கல்

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் புதுடில்லி வைசர்ஸ் நிறுவனம் நடத்திய டெக்னிக்கல் தேர்வில் பங்கேற்றனர்.

இதில் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவர் முகிலன் டிசைன் துறையில் ஆண்டிற்கு ரூ.12லட்சம் ஊதியத்தில் தேர்வு செய்யப்பட்டார். தேர்வான மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தம் உள்ளிட்டோர் பாராட்டி பணி நியமன ஆணையை வழங்கினர்.

Advertisement